இன்று ரேஷன் கடைகளுக்கு லீவு..தமிழக அரசு அறிவிப்பு..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்து கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்புகள் கடந்த 9ஆம் தேதி முதல் தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் 2வது வெள்ளிக் கிழமை விடுமுறை விடப்படும். ஆனால், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கடந்த வெள்ளிக்கிழமை வேலை நாளாக அறிவித்தது தமிழக அரசு.
அந்த பணி நாளுக்கு ஈடாக இன்று 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனவரி 27 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஜனவரி 16 விடுமுறை நாளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது