நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஜனவரி 17-ம் தேதி அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

> காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.

> மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து ( War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் ( Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

> வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ( விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும்) வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள்: பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்படும்.

ஃபோர்ஷோர் சாலை
விக்டோரியா வார்டன் விடுதி
கலைவாணர் அரங்கம் பார்க்கிங்
பிரசிடென்சி கல்லூரி
மெட்ராஸ் பல்கலைக்கழகம்
டிடி கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை)
MRTS – சேப்பாக்கம்
லேடி வெலிங்டன் பள்ளி
ராணி மேரி மகளிர் கல்லூரி
சீனிவாசபுரம் லூப் ரோடு / மைதானம்
PWD மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)
செயின்ட் பீட் மைதானம்
அன்னை சத்யா நகர்
ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்)
தலைமைச் செயலகத்தின் உள்ளே (காவல்துறை வாகனங்கள்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *