துர்கா ஸ்டாலினுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்..!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடை பெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அழைப்பிதழ் மற்றும் அட்சதை பிரசாதம் வழங்கி அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக வரும் 22-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் வழங்கினார்கள். அதனை பெற்றுக் கொண்ட அவர் விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.