Captain Miller Box Office: படிப்படியாக குறைந்து வரும் கேப்டன் மில்லர் வசூல்.. நான்காம் நாள் கலெக்ஷன்!
சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான திரைப்படம் கேப்டன் மில்லர்.
நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷின் வெறித்தனமான நடிப்பில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று ஆண்டுக்கும் மேலாக நடைப்பெற்று வந்த நிலையில், பொங்கல் பாண்டிகையையொட்டி படம் வெளியானது. இப்படத்தில் ஈசன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தனுஷின் அண்ணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ளார். இதுவரை படத்தில் அழகுப்பதுமையாக வந்து போன பிரியங்கா மோகனுக்கு இந்த படத்தில் ஓரளவிற்கு கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளியது. அந்த படத்தில் துப்பாக்கி, தோட்டா என சத்தம் காதை பிளந்தது. அந்த படத்திற்கு பிறகு துப்பாக்கி, குண்டு, தோட்டாவை பெரும்பாலான படத்தில் பார்க்க முடிந்தது. அதே போல, கேப்டன் மில்லர் படத்திலும் துப்பாக்கி சத்தமே அதிகமாக இருந்தது. இருந்த போதும், ஜி வி பிரகாஷின் பின்னணி இசை ரசிக்கும் படி இருந்தது என படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
நான்காம் நாள் வசூல்: இந்த திரைப்படம் ஜனவரி 12ந் தேதி வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் முதல் நாள் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இரண்டு நாளில் 7 முதல் 9 கோடியும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 7 கோடி ரூபாய் அளவுக்கே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சோகத்தில் ரசிகர்கள்: இதையடுத்து, பொங்கல் பண்டிகை தினமான நேற்று 6.50 கோடி ரூபாய் வசூலித்து பெருத்த சரிவை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் படி நான்கு நாட்கள் மொத்த வசூல் 30.45 கோடி ரூபாயாக உள்ளது. நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் படம் கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்த்த நிலையில் படத்தின் வசூல் படிப்படியாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் படத்திற்கு குவிந்து வரும் எதிர்மறையான விமர்சனம் என்று சொல்லப்படுகிறது. இதனால், தனுஷின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.