King Rasis: புத்தாண்டில் தலைமை வாய்ப்பை பெறப்போகும் ராசிகள்

நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைப்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்கு ஏற்றார் போல் பன்னிரண்டு ராசிகளுக்கும் பலன்கள் மாறி மாறி கிடைக்கும்.

மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள் அது நவகிரகங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் நவகிரகங்களில் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பார்கள்.

அந்தந்த கிரகத்தின் அடிப்படையில் சிலர் சிறப்பான குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு சில ராசிகள் தலைமைத்துவ பண்பை கிரகங்களின் செயல்பாடுகளால் பெற போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

சிம்ம ராசி

பிறரை வழிநடத்தக் கூடிய திறன் உங்களுக்கு இயற்கையிலேயே இருக்கின்ற காரணத்தினால் தலைமைத்துவம் பெற அதிக வாய்ப்பு உள்ளது உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் இறக்கம் உங்களை சுற்றி உள்ளவர்களை உங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்கும். சிலருடைய செயல்பாடுகளால் வரக்கூடிய புத்தாண்டில் தலைமைப் பொறுப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என கூறப்படுகிறது.

மேஷ ராசி

உங்களுக்கு சாகச மனப்பான்மை இயல்பிலேயே உண்டு. அதன் காரணமாக மனம் தளராமல் அனைத்தையும் உறுதியோடு செயல்படுத்தக் கூடியவர்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அச்சம் கொள்ளாமல் அதனை வெற்றி காண்பீர்கள். உங்களோடு பயணிக்கும் அனைவரையும் மன தைரியத்தோடு ஆபத்துகளை எதிர்கொள்ளும் அளவிற்கு ஊக்குவிப்பீர்கள். அதன் காரணமாக உங்களுக்கு வரக்கூடிய புத்தாண்டில் புதிய முன்னேற்றம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது.

மகர ராசி

ஒழுக்கமான மனநலமையோடு எப்போதும் செயல்பட விரும்புபவர்களில் நீங்களும் ஒருவர். அது மற்றவர்களிடத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கையை அதிகப்படுத்தும். மிகப்பெரிய லட்சியமாக இருந்தாலும் அதிக கவனம் செலுத்தி, கடின உழைப்பை கொடுத்து வெற்றி காண்பீர்கள் வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய ஆண்டாக அமையும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

தொலைநோக்குப் பார்வை அதிகம் கொண்டவர்களாக இருக்கும் நீங்கள். இயல்பாகவே ராஜதந்திர சிந்தனை கொண்டவர்கள். எந்த செயல்களிலும் சமரசம் இல்லாமல் அதிகம் முனைப்போடு செயல்பட்டு உங்கள் கருத்தை நிலை நிறுத்துவீர்கள். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த வழி வகுக்கும். குழுவாக சேர்ந்து பணியாற்றுவதில் நீங்கள் அதிக ஈடுபாடு கொடுப்பீர்கள். அதனை வழிநடத்தவும் செய்வீர்கள். வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *