கர்ணனாக நடிக்கும் சூர்யா… நாயகி யார் தெரியுமா?
கங்குவா படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை சூர்யா முடித்துவிட்டார். படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.
இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43 வது படத்தில் சூர்யா நடிக்கிறார். இதன் டைட்டிலை அடித்து அதன் கீழே புறநானுhறு என்று எழுதப்பட்ட போஸ்டரை வெளியிட்டனர். மதுரையில் 1950 – 1965 க்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கும் கதையிது என்று பேச்சு உள்ளது. துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா நடிக்க, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சுதா கொங்கரா படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்தியில் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரத கர்ணன் குறித்த கதையில் சூர்யா நடிக்கிறார். கர்ணனைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்த புராணப் படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கயிருப்பதாக மெஹ்ரா தெரிவித்துள்ளார்.
அதிக சிஜி வேலைகள் கொண்டதாக கர்ணன் படம் தயாராக உள்ளது. இதன் பட்ஜெட் சுமார் 500 கோடி என்கிறார்கள். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இதில் நாயகியாக நடிப்பதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபமாக புராண, இதிகாச கதைகளை திரைப்படமாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. கர்ணன் படத்தின் மூலம் சூர்யாவும் அந்த ஜோதியில் இணைய உள்ளார்.