இந்தியர்கள் பலர் வாங்க நினைக்கும் எலக்ட்ரிக் கார்கள்!! டாடாவில் வாங்குவதா? (அ) மஹிந்திராவில் வாங்குவதா?
இந்தியாவில் பல்வேறு கார் நிறுவனங்களில் இருந்து எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி மற்றும் மஹிந்திராவின் எக்ஸ்யூவி400 என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆதலால், இவை இரண்டில் எதை வாங்குவது என்கிற குழப்பம் உங்களுக்குள் இருக்கலாம். அந்த குழப்பத்தை தீர்க்க, இந்த இரு கார்களை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டேஸ்போர்டு: மஹிந்திரா எக்ஸ்யூவி400 மற்றும் டாடா நெக்ஸான் இவி என இரண்டிலும் இரு நிறங்களில் கேபின் கிடைக்கிறது. இருப்பினும், நெக்ஸான் இவி-இன் கேபின் இன்னும் மாடர்ன் தரத்தில் உள்ளதை கூறியே ஆக வேண்டும். இந்த டாடா எலக்ட்ரிக் காரில் ஒளிரக்கூடிய டாடா லோகோ உடன் ஸ்டேரிங் சக்கரம் கொடுக்கப்படுகிறது.
மறுப்பக்கம், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரின் டேஸ்போர்டு பளபளப்பான கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்படுகிறது. அதேநேரம், டேஸ்போர்டில் நிறைய இடங்களில் க்ரோம் இன்செர்ட்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் க்ளைமேட் கண்ட்ரோல் பேனல் சாதாரண பொத்தான்களுடனே கொடுக்கப்படுகிறது. டேஸ்போர்டு கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட, காரின் கேபினின் மற்ற பகுதிகள் பழுப்பு நிறத்தில் அலங்கரிக்கப்படுகின்றன.
டிஸ்பிளேஸ்: இந்த இரு எலக்ட்ரிக் கார்களிலும் ஓட்டுனருக்கு விபரங்களை வழங்கும் டிஸ்பிளே ஒரே அளவில் வழங்கப்படுகிறது. 10.25-இன்ச்சில் இந்த கார்களில் வழங்கப்படும் டிரைவர் டிஸ்பிளேகள் கவர்ச்சிக்கரமான கிராஃபிக்ஸ் மற்றும் வெவ்வேறான தீம்கள் உடன் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், பொழுதுப்போக்குக்கான இன்ஃபோடெயின்மெண்ட் திரை என வரும்போது நெக்ஸான் இவி 2.05 இன்ச் பெரிய திரையை பெறுகிறது.
அதாவது, மஹிந்திரா எக்ஸ்யூவி400-இல் 10.25-இன்ச்சிலும், டாடா நெக்ஸான் இவி-இல் 12.3-இன்ச்சிலும் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது. திரையை பெரியதாக பெறுவது மட்டுமின்றி, அர்கேட்.இவி அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை டாடா நெக்ஸான் இவி பெறுகிறது. அர்கேட்.இவி மூலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் பயணிகள் காணலாம்.
இருக்கைகள்: இந்த இரு எலக்ட்ரிக் கார்களிலும் லெதரேட் அப்ஹோல்ஸ்டரியில் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. நெக்ஸான் இவி காரின் இருக்கைகள் ட்யூயல்-டோன் நிறங்களில் ஃபினிஷ்டு செய்யப்பட்டு கொடுக்கப்படுகின்றன. அத்துடன், நெக்ஸான் இவி காரின் முன் இருக்கைகள் வெண்டிலேஷன் ஃபங்க்ஷனை கொண்டவைகளாக உள்ளன.
ஏற்கனவே கூறியதுபோல், மஹிந்திரா எக்ஸ்யூவி400 காரிலும் இருக்கைகள் லெதரேட் அப்ஹோல்டரியில் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரில் இருக்கைகள் ஒரேயொரு சிங்கிள்-டோனில் வழங்கப்படுகின்றன. அதேபோல், இந்த காரில் முன் இருக்கைகள் வெண்டிலேஷன் ஃபங்க்ஷன் உடன் கிடைப்பதில்லை.
வசதிகள்: இந்த இரு எலக்ட்ரிக் கார்களிலும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் வழங்கப்படுகிறது. ஆனால், நெக்ஸான் இவி காருக்கு கூடுதல் வைகல்-டூ-வைகல் மற்றும் வைகல்-டூ-லோடு திறன்கள் உள்ளன.
மறுப்பக்கம், மஹிந்திரா எக்ஸ்யூவி400 கார் ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோலை நெக்ஸான் இவி உடன் ஒப்பிடுகையில் கூடுதலாக பெறுகிறது. இதனுடன், சில கூடுதல் வசதிகளையும் எக்ஸ்யூவி400 ப்ரோ காரில் மஹிந்திரா வழங்கியுள்ளது. இருப்பினும், நெக்ஸான் இவி உடன் ஒப்பிடுகையில், எக்ஸ்யூவி400 தொழிற்நுட்ப வசதிகளில் சற்று பின்தங்கியே உள்ளது.
விலை: மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.15.49 இலட்சத்தில் இருந்து ரூ.17.49 லட்சம் வரையில் உள்ளன. அதுவே, டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.74 இலட்சத்தில் இருந்து ரூ.19.94 இலட்சம் வரையில் உள்ளன. அதாவது, நெக்ஸான் இவி சற்று விலைமிக்கதாக உள்ளது.