இந்த டாடா காருல சமைக்கலாம், படுத்து தூங்கலாம்… கேம்ப் செய்ய சிறந்த வாகனம்! காருனு இருந்தா இப்படி இருக்கணும்!
இந்த டாடா காரில் சமைக்க முடியும், ரெண்டுல இருந்து மூன்று பேர் வரை படுத்து தூங்கவும் முடியும். இந்த சூப்பரான வசதியை டாடா (Tata) கார் எப்படி பெற்றது? மேலும், இந்த சிறப்பு வசதிகளைப் பெற்ற டாடா கார் பார்ப்பதற்கு எப்படி இருக்கின்றது? என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பரான எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் சஃபாரி (Safari)-யும் ஒன்றாகும். டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது. பாதுகாப்பு விஷயத்தில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கையே இந்த கார் பெற்றிருக்கின்றது.
இத்தகைய காரில் மாடலிலேயே படுத்து தூங்கும் வசதி மற்றும் சமைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த வசதி கார் மாடிஃபிகேஷன் செயலின் வாயிலாகவே வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, டாடா மோட்டார்ஸால் வழங்கப்பட்ட வசதிகள் இது அல்ல. இந்த வசதிகள் அனைத்தும் அந்த டாடா சஃபாரி கார் உரிமையாளரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டதே ஆகும்.
சஃபாரி காரின் உரிமையாளர் அதிகம் டிராவல் செய்யக் கூடியவராக இருக்கின்றார். இந்த நிலையிலேயே தன்னுடைய டிராவலின்போது உதவியாக இருக்கும் விதமாக சஃபாரி காரில் சில மாற்றங்களை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே காருக்குள் கிட்சன் மற்றும் பெட்ரூம் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
கார்பென்டர் ஒருவரின் உதவியுடன் இந்த மாற்றத்தை அவர் செய்திருக்கின்றார். மொத்தமாக கேம்பிங் செய்வதற்கு உகந்த காராக அதனை அவர் மாற்றி இருக்கின்றார். மிகவும் சிம்பிளான கேம்பிங் வசதிகளே இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், சமைப்பதற்கு ஏதுவாக ஒற்றை பர்னர் கேஸ் ஸ்டவ், கிட்சன் மற்றும் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வைத்துக் கொள்ள ஏதுவாக ஸ்டோரேஜ் ஆகியவை சஃபாரியில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அமைப்பிற்காக காரின் கடைசி வரிசை, அதாவது, மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பில் அவர் மிகப் பெரிய மாற்றத்தைச் செய்திருக்கின்றார். மேலும், அவர் செய்திருக்கும் அனைத்து மாற்றங்களும் சுலபமாக கழட்டும் வசதிக் கொண்டதாக இருக்கின்றன. ஒரு சிலர் தாங்கள் மேற்கொள்ளும் மாற்றத்தை நிரந்தரமானதாக மாற்றுவர்.
ஆனால், இவர் தேவைக்கேற்ப காரை கேம்பிங் அல்லது பயணிகள் வாகனமாக மாற்றும் நோக்கில் இவ்வாறு செய்திருக்கின்றார். மேலும், இந்த மாற்றத்திற்காக அவர் பிளை-உட்களை பயன்படுத்தி இருக்கின்றார். இதனால்தான் இந்த கார் மாடிஃபிகேஷனுக்கு அவர் கார்பென்டரைப் பயன்படுத்தி இருக்கின்றார். இந்த ஸ்டோரேஜ்களுக்கு மேலேயே படுக்கையை விரித்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கிக் கொள்வதன் வாயிலாக மூன்று பேர் வரை படுக்கும் வசதிக் கொண்டதாக அந்த கார் மாறும். இத்தகைய மாற்றத்தினாலேயே கேம்ப் செய்வதற்கு உகந்த வாகனமாக டாடா சஃபாரி மாறி இருக்கின்றது. மேலும், இதுபோன்ற டாடா காரை இந்தயாவில் வேறு எங்கும் பார்க்க முடிாயது என்பது கவனிக்கத்தகுந்தது.
டாடா சஃபாரி ரூ. 16.19 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் மாடலின் அதிகபட்ச விலையே ரூ. 25.49 மட்டுமே ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். சஃபாரியில் டாடா நிறுவனம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஆப்ஷன் ரூ. 20.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.