தொடங்கியது அனிமல் 2 படம்… ஷூட்டிங் எப்போது தெரியுமா?
அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவின் மூன்றாவது படம் அனிமல். ரன்பீர் கபூர் நாயகனாகவும், அனில் கபூர் அவரது தந்தையாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருந்தனர்.
ராஷ்மிகா மந்தனா நாயகி. இந்தியில் தயாரான அனிமல் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர்.
வன்முறை, பாலியல் அத்துமீறல், ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குத்தனங்களால் அனிமல் நிறைந்திருந்தது. இந்தப் படத்திற்கு பல தறப்பினரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். ஆனால் இது எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை. படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களிடையே பரவி வருகின்றது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, ‘அனிமல்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2025-ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் இந்த பாகத்திற்கு ‘அனிமல் பார்க்’ என பெயர் வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.