இப்பதாங்க பொங்கலே பொங்கல் மாதிரி இருக்கு.. இந்தியாவே காத்துகிடந்த ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனைக்கு அறிமுகம்..
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் புதுமுக பைக்கான ஷாட்கன் 650 (Shotgun 650)-ஐ இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்புகள் என்ன என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஷாட்கன் 650 (Shotgun 650) பைக்கையே அது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருநாளில் இந்த பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. இந்த பைக்கின் உலக வெளியீடு சமீபத்திலேயே நடைபெற்றது. கோவாவில் மோட்டோவெர்ஸ் 2023 (Motoverse 2023) நிகழ்ச்சியின் வாயிலாகவே இந்த பைக் உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே அதிகாரப்பூர்வமாக பைக் நேற்றைய (ஜனவரி 15) தினம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. அறிமுகமாக ரூ. 3.59 லட்சம் விலை இந்த பைக்கிற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஷீட்மெட்டல் கிரே தேர்வின் விலையே இது ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக கிரீன் டிரில் இருக்கின்றது. இதன் விலை ரூ. 3.70 லட்சம் ஆகும். மூன்றாவது தேர்வாக பிளாஸ்மா ப்ளூ இருக்கின்றது. இதன் விலை ரூ. 3.73 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் காஸ்ட்லியான பைக் மாடலாக இந்த பைக் புதிய இருக்கின்றது.
விலைக்கு ஏற்ப அதிக பிரீமியம் அம்சங்கள் மற்றும் சிறப்புகள் தாங்கியதாக ஷாட்கன்650 இருக்கின்றது. இந்த பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் புகழ்பெற்ற கான்செப்ட் மாடலான எஸ்ஜி650 கான்செப்ட்-ஐ தழுவியே தயார் செய்திருக்கின்றது. இது ஓர் 650 சிசி பைக் மாடல் ஆகும்.
648 சிசி பாரல்லல் ட்வின் சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 47 பிஎஸ் மற்றும் 52.3 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதி கொண்டதே இந்த டிரான்ஸ்மிஷன் ஆகும். இந்த அம்சத்தை அனைத்தும் வேரியண்டுகளிலும் ராயல் என்பீல்டு வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கின் முன் பக்கத்தில் 18 அங்குல வீலும், பின் பக்கத்தில் 17 அங்குல வீலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
பத்து ஸ்போக்குகள் கொண்ட வீலே இது ஆகும். மேலும், இதன் வீல் பேஸ் சற்று குறைவாக உள்ளது. ஆகையால், இதில் ரைடு மேற்கொள்ளும்போது தனித்துவமான ரைடு அனுபவம் உறுதியாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மேலும், இந்த பைக்கில் சிங்கிள் சீட் அல்லது இருவர் பயணிக்கும் சீட் கொண்ட வாகனம் என இரண்டு விதமாக டிரான்ஸ்ஃபார்ம் செய்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட இருப்பதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்து இருக்கின்றது.
இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்திற்காக ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன் பக்கத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்வின் ஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த சஸ்பென்ஷன் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், கைகளால் தைக்கப்பட்ட லெதர் இருக்கை, எல்இடி மின் விளக்குகள், கவர்ச்சியான ரியர் வியூ மிர்ரர்கள், ட்ரிப்பர் நேவிகேஷன், நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.