நட்சத்திர ஹோட்டலில் பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த சிஇஓ.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
டெல்லியில் உள்ள ஹோட்டலில் தனியார் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, அமெரிக்க வாழ் இந்திய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வந்த 42 வயது பெண், டெல்லி காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தாம் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி வருவதாகவும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள 5 நட்சத்தில் ஓட்டலில் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா, அந்த சிஇஓக்கு அறிமுகம் ஆனவர் என்றும் அவர் பரிந்துரையிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வேலை கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதேபோன்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்த 44 வயது அமெரிக்கப் பெண், டெல்லியில் 2 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
கடற்கரையோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, சிகரெட்டை பகிர்ந்துக்கொள்ள வந்த 2 பேர், மதுபானத்தை குடிக்க வைத்து அந்த பெண்ணின் நிதானத்தை இழக்க செய்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணை பைக்கில் ஏற்றிச் சென்று, வீடு ஒன்றில் வைத்து தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது.