சதியை அறிந்த பரணி.. சண்முகத்தை காப்பாற்ற எடுத்த முடிவு!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கபடி போட்டியில் சண்முகத்துக்கு கத்திக்குத்து ஏற்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சண்முகம் ரத்த வெள்ளத்தில் கிடக்க சௌந்தரபாண்டியன் அவரது அக்கா பாண்டியம்மாவும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு சண்முகத்தை கத்தியால் குத்திய ரவுடிகளுக்கு பணத்தை கொடுத்து சந்தோஷமாக வழி அனுப்பி வைக்கின்றனர்.
அடுத்ததாக சண்முகத்தை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர இந்த விஷயம் அறிந்த சௌந்தரபாண்டி டாக்டருக்கு போன் போட்டு அவனை கொன்னுடு என சொல்ல டாக்டர் ட்ரீட்மென்ட் கொடுக்காமல் விட்டாலே செத்துப் போயிடுவான் என இழுத்தடிக்கிறார்.
ஒரு கட்டத்தில் இதை அனைத்தும் சௌந்தர பாண்டியின் சதி என்பதை பரணி அறிய எல்லாரையும் அடித்து துரத்திவிட்டு பரணி சண்முகத்தின் தங்கைகளை துணைக்கு வைத்து கொண்டு ஆபரேஷன் செய்ய தயாராகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன.? சண்முகத்தின் உயிரை பரணி காப்பாற்ற போவது எப்படி என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.