Javarisi Vadai : ஜவ்வரிசி வடை! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாலைநேர சிற்றுண்டி!
வடை எப்போதும் ஒரு சிறப்பான மாலை நேர சிற்றுண்டி. இவற்றை பல வழிகளில் தயாரிக்க முடியும். இந்த ஜவ்வரிசி வடையை நீங்கள் எளிதாக செய்துவிடமுடியும். இது ஆரோக்கியமானதும் கூட. இதை நீங்கள் டெமேட்டோ கெட்ச்அப் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குழந்தைகள் இந்த வடையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பள்ளிவிட்டு வந்தவுடன் அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் சுவை அள்ளும். ஜவ்வரிசியில் வடை செய்து சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள்.
தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி – அரை கப்
- உருளைக்கிழங்கு – 3 வேக வைத்தது
- வேர்க்கடலை – அரை கப்
- பச்சை மிளகாய் – 4
- எலுமிச்சை பழச்சாறு – ஒரு பழம்
- சீரகம் – அரை ஸ்பூன்
- கல்லுப்பு – ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – நறுக்கியது ஒரு கைப்பிடி
- எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை
ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊறவைத்து, வடிகட்டி எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் எடுத்து, துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அகல பாத்திரத்தில், வேகவைத்த உருளைக்கிழங்கு, ஊறவைத்த ஜவ்வரிசி, எலுமிச்சை பழச்சாறு, சீரகம், கல்லுப்பு, அரைத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை சேர்த்து மசித்து பிசையவேண்டும்.
கையில் சிறிது எண்ணெய் தடவி, ஜவ்வரிசி கலவையை வடை போல் தட்டவேண்டும்.
எண்ணெய்யை சூடு செய்து, வடையை பொரித்து எடுக்கவேண்டும்.
ஜவ்வரிசி வடை தயார்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
குழந்தைகளுக்கு கொடுத்தால் குதூகலத்துடன் சாப்பிடுவார்கள்.