இணையத்தில் வைரல்… வெளியான கங்குவா படத்தின் புதிய போஸ்டர்..!
நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். அதில் சமூக பிரச்சனை குறித்து பேசப்பட்டது. பாண்டிராஜ் படத்தை இயக்கினார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல, விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது ரசிகர்களிடையே மாபெரும வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படம் கங்குவா. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்குகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் மட்டுமில்லாமல் சுமார் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் ராஜமுந்திரில் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
அண்மையில் கங்குவா படத்தில் தனக்கான காட்சிகளை நிறைவு செய்ததாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய போஸ்டரை வடிவமைத்து படக்குழு பகிர்ந்ந்துள்ளது. அது வைரலாகி வருகிறது.