மதுரை டூ சென்னை, கோவை டூ சென்னை.. பஸ் கட்டணத்தில் விமானத்தில் டிக்கெட்… எப்படி கிடைக்கும் தெரியுமா?
சென்னை: பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், விமானத்தில் பயணிக்க டிக்கெட் புக்கிங் செய்வது கடினம் ஆகும்.
10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் இருக்கிறது. ஆனால் ஆம்னி பேருந்துகள் கட்டணத்திலேயே விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து ஈஸியாக பயணிக்க முடியும். அது எப்படி என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு விமான பயணம் நடுத்தர வர்க்கத்தினருக்கே எட்டாத அளவிற்க உயர்ந்துவிட்டது. காரணம் நினைத்துபார்க்கவே முடியாத அளவிற்கு விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்துவிட்டது. அதேநேரம் சில விஷயங்களை சரியாக திட்டமிடுவதன் விமானங்களில் ஆம்னி பேருந்து கட்டணத்திலேயே முன்பதிவு செய்ய முடியும். விமானங்களில் டிக்கெட் கட்டணம் என்பது தேவை அதிகரித்தால் அதிகமாகவும், தேவை குறைந்தால் கட்டணம் குறைவாகவும் இருக்கும்.
அந்த வகையில் 2 அல்லது 3 மாதம் முன்பே சரியான நாளை தேர்வு செய்து டிக்கெட் முன்பதிவு செய்வதால் டிக்கெட் கட்டணம் பொதுவாக குறைவாகவே இருக்கும். இதுதவிர கிரிடிட் கார்டு பயன்படுத்தினால் தள்ளுபடி, இந்த ஆப்பில் புக்கிங் செய்தால் தள்ளுபடி, இந்த கிழமைகளில் புக்கிங் செய்தால் கணிசமான தள்ளுபடி என்று விமான நிறுவனங்கள், டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் அறிவிக்கின்றன. அந்த சலுகைகளை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால் 2000 முதல் 4000 ரூபாயில் விமானத்தில் மதுரைக்கோ, கோவைக்கோ போக முடியும். எப்போதும் அதிகமான கட்டணம் உள்ள மதுரையில் இருந்து சென்னைக்கு கூட மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும்.
இதேபோல் விமான டிக்கெட் விற்காத நாட்களில் குறைந்த கட்டணமே வசூலிப்பார்கள். நாம் பயணிக்க விரும்பும் பாதையில் மட்டுமல்ல, இந்தியாவில் இருந்து நாட்டில் உள்ள எந்த நகரத்திற்கும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். அதற்கான நாட்கள் என்ன என்பதை கவனித்து, நாம் தான் சரியான முறையில் புக்கிங் செய்வது மட்டுமே நம்முடைய பணியாக இருக்க வேண்டும். இது இந்தியாவிற்குள் மட்டுமல்ல.. இந்தியாவில் இருந்து உலகின் எந்த நகரத்திற்கும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். ஆனால் அந்த நாளை தேர்ந்தெடுத்து பயணிப்பது நம் கையில் தான் உள்ளது.
குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்வதற்கு skyscanner app என்ற ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யுங்கள்.அதில் போய் பிளைட் பகுதியில் நகரத்தின் கட்டத்தில் இந்தியா என்று டைப் செய்யுங்கள். கீழே everywhere (எங்கு வேண்டுமானாலும்) என டைப் செய்யுங்கள்.
நேரம், நாள் என எதையும் குறிப்பிட வேண்டாம்.