திருவள்ளுவரை யாரும் கறைபடுத்த முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சென்னை: “குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறை படுத்த முடியாது” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பெயரை குறிப்பிடாமல் பதிலடி தந்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. அப்பதிவில், திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

மேலும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட படத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்திருந்தார். அத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் காவி உடையுடன் உள்ள திருவள்ளுவர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் படத்துக்கு பாஜகவினர் காவி உடை அணிவித்தது ஏற்கனவே சர்ச்சையானது.

ஆனால் தற்போது ஆளுநர் ரவியும் காவி உடையுடனான திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து, அப்படத்துக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். மேலும் திருவள்ளுவர் சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி எனவும் புகழ்ந்துள்ளார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *