ராமர் கோயில் அழைப்பிதழ் தொகுப்பில் என்னென்ன உள்ளது தெரியுமா?
உத்தரப்பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ராமர் பிரதிஷ்டை திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஈபிஎஸ், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.தோனிக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழுடன் விருந்தினருக்கு சிறப்பு அன்பளிப்பு ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது. அழைப்பிதழின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.