அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம்; இன்று முதல் சிறப்பு பூஜை

அயோத்தி: வரும் 22 ம் தேதி ராமர்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. இதற்கென முன்னதாக நடக்கும் சடங்குகள் மற்றும் சிறப்பு பூஜை இன்று முதல் துவங்குகிறது.
கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் இன்று முதல் துவங்கி ஜன.,21 வரை நடக்கின்றன.
இன்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட ஆச்சார்யா பரிகார பூஜை நடத்துகிறார். நாளை (ஜனவரி 17) ராம் லல்லா சிலையின் பரிசார் பிரவேசம் விழா நடைபெறுகிறது. 18ம் தேதி ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் சடங்குகளும், 19ம் தேதி கேசராதிவாஸ், கிருதாதிவாஸ் ஔஷததிவாஸ் போன்ற சடங்குகளும் நடைபெறுகின்றன. 19ம் தேதி மாலை, தான்யாதிவாஸ் சடங்கு நடைபெறும்.
20ம் தேதி காலை ஷர்கராதிவாஸம், பலாத்வாஸ் சடங்குகளும், மாலையில் புஷ்பதீபம் நடக்கவுள்ளன. 21ம் தேதி காலை மத்யாதிவாஸ் மற்றும் மாலை ஷியாதிவாஸமும் சடங்குகளும் நடைபெறவுள்ளன.உலகமே எதிர்பார்க்கும் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடக்கிறது.இத்தகவலை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறினார்.