ஜன.19ல் பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

மிழகத்தில் திருவிழாக்களும், பண்டிகை கொண்டாட்டங்களும் களைக்கட்டியுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தையடுத்து, சென்னை புத்தக திருவிழா, பொருட்காட்சிகள், சென்னை சங்கமம், பொங்கல் திருவிழா, ஜல்லிக்கட்டு போட்டிகள் என அடுத்தடுத்து கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வந்த நிலையில், வரும் ஜனவரி 19ம் தேதி பழநியில் தைப்பூச திருவிழா துவங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. வருடம் முழுவந்தும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருவிழா நடைப்பெற்றாலும் தைப்பூச திருவிழா கூடுதல் விசேஷம். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் கேரளத்தில் இருந்தும் ளாவில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக, காவடி சுமந்து சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இப்படி பெரும் பிரசித்தி பெற்ற இந்த திருவிழா ஜனவரி 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இத்திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் ஜனவரி 24-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெறும். அன்று இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரத உற்சவம் நடைபெறும்.

 

ஒவ்வொரு வருடமும் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூச திருவிழா வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். பக்தர்கள் தைப்பூச திருவிழவினையொட்டி, விரதமிருந்து முருகனுக்கு விதவிதமான காவடிகளைச் சுமந்து நடைப்பயணமாக பல ஊர்களில் இருந்து பழநி மலையேறி முருகனை தரிசித்து செல்கிறார்கள். இந்த வருட தைப்பூசத் திருவிழா, பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரும் ஜனவரி 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *