Infosys பங்குகளில் ரூ.10,000 முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. சேவை நிறுவனம் இன்போசிஸ். கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
இதனால் இந்நிறுவன பங்கின் விலை சற்று தேக்க நிலையில் இருந்து வந்தது.இந்நிலையில் அண்மையில் இன்போசிஸ் நிறுவனம் தனது 2023 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்ததால் இன்போசிஸ் நிறுவன பங்கின் ஏற தொடங்கியது. இன்போசிஸ் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.6,552 கோடி ஈட்டியுள்ளது.
இது 2023 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். அந்த காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.6,245 கோடி ஈட்டியிருந்தது.இன்போசிஸ் லாபம் அதிகரிப்பு எதிரொலியாக வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் அந்நிறுவன பங்கின் விலை 7 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இன்போசிஸ் பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,664.90ஐ எட்டியது.
இப்போது இந்நிறுவன பங்குகளில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்தால், இன்போசிஸ் பங்கு தனது இதுவரை இல்லாத உயர்ந்த விலையை எட்டினால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? அதற்கு முன் இன்போசிஸ் பங்கின் அதிகபட்ச விலை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்க. 2022 ஜனவரி 19ம் தேதியன்று இன்போசிஸ் பங்கு விலை இதுவரை இல்லாத அளவான ரூ.1,939.50ஐ தொட்டது.தற்போதைய இன்போசிஸ் பங்கின் விலை அடிப்படையில் நீங்கள் ரூ.10,000க்கு 6 பங்குகளை வாங்கலாம். அந்நிறுவன பங்கு இதுவரை இல்லாத உச்சவிலையை தொட்டால் உங்கள் முதலீடு சுமார் ரூ.12,000ஆக உயரும்.இன்போசிஸ் பங்குகளை வாங்கலாம் என்றே பல முன்னணி ஆய்வு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. ஜெப்ரிஸ் நிறுவனம் இன்போசிஸ் பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. மேலும், இலக்கு விலையை ரூ.1,740ஆக நிர்ணயம் செய்துள்ளது.கோடக் செக்யூரிட்டிஸ் பங்குகளை BUY என மதிப்பீடு செய்ததோடு, அதன் இலக்கு விலையை ரூ.1,800ஆக நிர்ணயம் செய்துள்ளது. மோதிலால் ஓஸ்வால் மற்றும் ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களும் இன்போசிஸ் பங்குகளை வாங்கலாம் என தெரிவித்துள்ளன.