ஸ்கெட் சேகருக்கு இல்ல சௌந்தரு.. குஜராத்துக்கு ஷாக் கொடுத்த தமிழ்நாடு.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!
தமிழ்நாடு அரசு முதலீட்டாளர் மாநாட்டில் செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் பாலிசி 2024-ஐ வெளியிட்டது.
அடுத்த 30 வருட வளர்ச்சிக்கு அடித்தளமிடும் திட்டத்துடன் இந்தக் கொள்கை வெளியிடப்பட்டது மட்டும் அல்லாமல் உயர் தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முக்கிய இலக்காகக் கொண்டு இந்தக் கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது.செமிகண்டக்டர் நிறுவனங்களை ஈர்க்க தமிழக அரசு சலுகைகளை அள்ளி கொடுத்துள்ளது, பல மாநிலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் இதைத் தாண்டி யாராலும் கூடுதல் சலுகையை அளிக்க முடியாத அளவுக்குச் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது தான் தனிச் சிறப்பு.
இப்படி என்ன சலுகை கொடுத்துள்ளது..? வாங்க பார்ப்போம். மத்திய அரசின் செமிகண்டக்டர் துறைக்கான 10 பில்லியன் டாலர் மதிப்பிலான மானிய திட்டத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி தளத்தை அமைக்கத் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் 50 சதவீத கூடுதல் மானியத்தை வழங்குவதாகச் செமிகண்டக்டர் கொள்கையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி தளத்தை அமைக்கும் நிறுவனங்களுக்கு, பயிற்சி, ப்ராடெக்ட் டெஸ்டிங், ப்ரோடோடைப்பிங், ஸ்டாம்ப் டூட்டி, மின்சாரம் ஆகியவற்றில் கூடுதல் சலுகை, தள்ளுபடிகளை அளிக்க உள்ளது.மேலும் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் தமிழர்களைப் பணியில் அமர்த்தினால் முதல் வருடத்திற்கு 30 சதவீதமும், 2வது வருடத்திற்கு 25 சதவீதமும், 3வது வருடத்திற்கு 20 சதவீத payroll reimbursement-க்கு தகுதி அடைவார்கள்.
இந்த payroll reimbursement தொகை ஒரு மாதத்திற்கு அதிகப்படியாக 20000 பேருக்கு அளிக்கப்படும்.அதாவது தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் நிறுவனத்தில் நியமிக்கப்படும் 20000 ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு திருப்பிச் செலுத்துதல். இந்தச் சலுகை 3 வருடத்திற்கு அளிக்கப்படும்.மத்திய அரசு அளிக்கும் சலுகையைத் தாண்டி குஜராத் 40 சதவீத மானியத்தைக் குஜராத் அளிக்கும் வேளையில், தமிழ்நாடு அரசு 50 சதவீதம் மானியத்தை CAPEX-ல் அளிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு குஜராத்-ஐ ஓரம்கட்டியுள்ளது.
ஆனால் குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே அமெரிக்காவின் மைக்ரான தொழிற்சாலை கட்டும் பணிகளைத் துவங்கியுள்ளது. டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.