எங்க திட்டமே வேற பாஸ்.. முதல்வர் முக.ஸ்டாலின் போட்ட புதுக் கணக்கு..!! #ChipWar
2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியாளராக உருவெடுத்த பின், தமிழ்நாடு இத்துறையில் புதிய லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இதன் முதல் படியாக, முதலீட்டாளர் மாநாட்டில் செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் பாலிசி 2024-ஐ தமிழக அரசு வெளியிட்டது.
2030க்குள் இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 40% அளவீட்டை தமிழ்நாட்டின் பங்கீடாக இருக்க வேண்டும் என்றும் (இப்போது 30%), 2030க்குள் இரண்டு லட்சம் பேரை இத்துறையில் திறமையானவர்களாக உருவாக்குவதையும் இந்தக் கொள்கை மூலம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதேவேளையில் இந்தக் கொள்கை மூலம் தமிழ்நாடு அரசு, எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதையும், செமிகண்டக்டர் எகோசிஸ்டம் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த நிலையில் செமிகண்டக்டர் துறையைச் சுற்றியுள்ள புவிசார் அரசியல் குறித்துச் சிப் வார் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்ட ஆசிரியர் கிறிஸ் மில்லர் கூறுகையில், இந்திய செமிகண்டக்டர் துறையில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அனைத்தும் முன்னிலையில் இருந்தாலும்….செமிகண்டக்டர் துறையில் முக்கியக் கட்டமான சிப் வடிவமைப்பில் வலுவான கவனம் செலுத்தும் தமிழகத்தின் புதிய கொள்கை நன்றாக வேலை செய்யும் தான் நம்புவதாகச் சிப் வார் புத்தக ஆசிரியர் கிறிஸ் மில்லர் தெரிவித்துள்ளார்.செமிகண்டக்டர் துறை நிறுவனங்களை ஈர்க்க தமிழக அரசு அதிகப்படியான சலுகைகளை அள்ளிக்கொடுத்துள்ளது.
இதுவரையில் எந்தத் துறைக்கும் இதுப்போன்ற சலுகைகளைத் தமிழக அரசு கொடுத்தது இல்லை. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்கள் மத்தியிலான ரேசில் தமிழ்நாட்டின் வெற்றிக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.