அயோத்தி ராமர் கோயில்: ஒரு நாளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்..!! அடேங்கப்பா..!!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவை இந்தியாவில் இருக்கும் மக்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் இந்திய மக்கள், வெளிநாட்டினரும் கூர்ந்து கவனித்து எதிர்பார்த்து காத்திருக்கின்றன.ராமர் கோயில் திறப்பு விழா ஏற்பாடுகள் தடபுடலாகவும் கோலாகலமாக ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ் செய்து வருகிறது. ஜனவரி 22 ஆம் தேதியன்று ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் கோயில் திறப்பு விழா காரணமாக அயோத்தியில் புதிய விமான நிலையம், புதிய ரயில் நிலையும், புதிய நீர்வழி போக்குவரத்து, ஹோட்டல், உணவகம் என மொத்த நகரமும் புதிய பொலிவைப் பெற்று வரும் வேளையில் ஜனவரி 22 ஆம் தேதி மட்டும் அயோத்தியிலும், ராமர் கோவில் திறப்பு விழாவைச் சார்ந்து சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உருவாகும் என்று வர்த்தகர்களின் அமைப்பான CAIT திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) பல்வேறு மாநிலங்களில் உள்ள 30 நகரங்களின் வர்த்தகச் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.ராமர் கோயில் திறப்பு விழா சமய மற்றும் மத உணர்வுகளை எதிரொலிப்பது மட்டுமல்லாமல் பொருளாதார நடவடிக்கைகளிலும், முதலீட்டிலும் புதிய நம்பிக்கையைக் கொண்டு வருகிறது.
மக்களின் நம்பிக்கையும், நாட்டின் பொருளாதார அமைப்பின் அடிப்படையில் பல புதிய தொழில்களை அயோத்தியில் உருவாக்க வழிவகுக்கின்றன என்று CAIT அமைப்பின் தேசிய செயலாளர் பரவீன் தெரிவித்துள்ளார்.தற்போது அயோத்தியில் அதிகளவில் டிமாண்டில் இருக்கும் பொருட்களாக ராமர் கொடி, பேனர், தொப்பி, டிசர்ட், ராமர் முகம் கொண்ட பிரின்ட் செய்யப்பட்ட குர்தா அதிகளவில் தேவைப்படுகிறது. இதேபோல் ராமர் கோவிலின் மாதிரி வடிவம் இதுவரையில் 5 கோடி சிறு விற்பனையாளர்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்துள்ளனர்.