அசிம் பிரேம்ஜி, நாராயண மூர்த்தி வாழ்க்கையில் நடந்த ‘அந்த’ ஒரு சம்பவம்.. தலைகீழாக மாறிய கதை..!!
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியும் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியும் வெற்றிகரமான இந்திய தொழில் அதிபர்கள் ஆவர்.
ஆனால் வேலை கேட்டு விண்ணப்பித்த நாராயண மூர்த்தியை அசிம் பிரேம்ஜி புறக்கணித்தார் என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருக்கும்.விப்ரோ நிறுவனர் பின்னர் இதுபற்றி கூறுகையில் வாழ்க்கையில் தான் செய்த மிகப் பெரிய தவறு இது என்றார்.
இதுபற்றி நாராயண மூர்த்தி கூறுகையில் அசிம் என்னிடம் ஒருமுறை பேசும்போது என்னை வேலைக்கு எடுக்காதது தான் செய்த மிகப் பெரிய தவறாகும் என்று குறிப்பிட்டார் எனக் கூறினார். நாராயண மூர்த்தியும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் ஒருவேளை சம்பவம் வேறுமாதிரியாக இருந்தால் பிரேம்ஜிக்கும் விப்ரோவுக்கும் இன்றைக்கு இப்படியொரு போட்டி ஏற்பட்டிருக்காது என்றனர்.கர்நாடக மாநிலத்தில் 1946 ஆம் ஆண்டு பிறந்த நாராயண மூர்த்தி தனது இஞ்சினியரிங் படிப்பை 1967 ஆம் ஆண்டில் நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் இஞ்சினியரிங்கில் முடித்தார்.கான்பூர் இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜியில் முதுநிலை பட்டம் முடித்தார்.
ஐஐஎம் ஆமதாபாத்தில் தனது புரபஷனல் பயணத்தை ஒரு ரிசர்ச் அசோசியேட்டாகத் தொடங்கினார் நாராயண மூர்த்தி. இன்போசிஸ்-ஐ தொடங்குவதற்கு முன்பாக அவர் சாப்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் அது வெற்றிகரமாக அமையவில்லை.இதைத் தொடர்ந்து அவர் புனேயில் உள்ள பத்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
1981 ஆம் ஆண்டில், நாராயண மூர்த்தி மற்றும் அவரது ஆறு நண்பர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அவரது மனைவி சுதா மூர்த்தியுடன் இணைந்து நிறுவினர்.நாராயண மூர்த்திக்கு சுதா ரூ 10,000ஐ தொடக்க மூலதனத்தை வழங்கினார். நாராயண மூர்த்தி 1981 முதல் 2002 வரை 21 ஆண்டுகள் இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
அவர் 2002 முதல் 2006 வரை குழுவின் தலைவராக இருந்தார், அதன் பிறகு அவர் தலைமை வழிகாட்டியாகவும் ஆனார். 2011 இல், அவர் இன்ஃபோசிஸில் இருந்து ஓய்வு பெற்றார்.நாராயண மூர்த்தி தனது செல்வத்தை புதிதாக கட்டமைத்தார். மறுபுறம், அசிம் பிரேம்ஜி தனது 21 வயதில் தனது தந்தை முகமது ஹாஷிம் பிரேம்ஜியிடமிருந்து ஒரு தாவர எண்ணெய் வணிகத்தை மரபுரிமையாகப் பெற்றார்.