கடும் குளிர்… ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற புலம்பெர்ந்தோர் குழு சடலமாக மீட்பு… ஒருவர் கவலைக்கிடம்

உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்கு நுழைய முன்ற நால்வர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவுக்கு நுழைய முயன்றவர்களில்

வடக்கு பிரான்சில் இருந்து சிறு படகு மூலமாக ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்கு நுழைய முயன்றவர்களில் நால்வரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை பிரான்ஸ் அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ளனர். சிறு படகு மூலமாக ஐவர் குழு கப்பல் ஒன்றில் நெருங்க முயன்ற நிலையில், அவர்களது சிறு படகு விபத்தில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் நால்வர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ரோந்து படகு ஒன்று பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், நான்கு சடலங்களை மீட்டுள்ளனர்.

2024ல் ஆங்கில கால்வாயில் பதிவாகும் முதல் புலம்பெயர்ந்தோர் மரணம் இதுவென்று கூறப்படுகிறது. பிரான்சின் கலேஸைச் சுற்றியுள்ள பகுதியானது, பிரித்தானியாவில் நுழைய மிக குறுகிய தொலைவு என்றே கருதப்படுகிறது.

வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்

 

இதனாலையே பெரும்பாலான புலம்பெயர் மக்கள் ஆங்கில கால்வாயை கடக்க முயல்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக Sangatte பகுதியில் அமைந்துள்ள செஞ்சிலுவை சங்கத்தின் மையம் மூடப்பட்ட பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் கலேஸ் மற்றும் டன்கிர்க் அருகே கூடாரங்கள், தற்காலிக தங்குமிடங்களில் வாழ்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *