எங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! ஹமாஸை அழிப்போம் – சூளுரைத்த நெதன்யாகு
ஹமாஸை அழிப்பதில் இருந்து தங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
100 நாட்கள் போர்
ஹமாஸ், இஸ்ரேல் இடையிலான போர் 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த போரினால் பாலஸ்தீனத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 23,000-ஐ கடந்துள்ளதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் போர் தொடர்பில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்து வருவதாக, தென் ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
யாராலும் தடுக்க முடியாது
இந்த நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தங்களை யாராலும் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.
தொலைக்காட்சி உரையில் பேசிய அவர், ‘ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் இருந்து யாராலும் எங்களை தடுத்தது நிறுத்த முடியாது. எகிப்துடனான காசா பகுதியின் பிலடெல்ஃபி எல்லையை, இஸ்ரேல் இராணுவம் கையகப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இராணுவத் தாக்குதல் மூலம் காஸாவில் ஏற்கனவே முற்றுகையிட்ட பெரும்பாலான ஹமாஸ் பட்டாலியன்கள் அகற்றப்பட்டுவிட்டன என்றும், வடக்கு காசா பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாது என்றும் கூறினார்.