“காட்டுக்கு சிங்கம்.. கிரிக்கெட்டுக்கு விராட் கோலி.. அவர் இருந்தா போதும்” – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

தற்போதைய கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாக விளங்குபவர் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி. உலகமெங்கும் இருந்து அவரது கிரிக்கெட் திறமைக்காக ரசிகர்கள் வருகிறார்கள்.

அதே சமயத்தில் அவர் உடல்தகுதியில் காட்டும் கவனம் பல இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கிறது. இதனால் கிரிக்கெட்டுக்கு வெளியில் இருக்கும் இளைஞர்கள் கூட, விராட் கோலியை இந்த விஷயத்தில் முன்மாதிரியாக எடுத்து செயல்படுகிறார்கள்.

இப்படி கிரிக்கெட்டில் இருந்து அதிக புகழுடையவராகவும், அதே சமயத்தில் யாரை விடவும் கிரிக்கெட்டில் அதிகம் வருமானம் ஈட்டக் கூடியவராகவும் விராட் கோலி இருந்து வருகிறார்.

பொதுவாக விராட் கோலி பேட்டிங்கில் எவ்வளவு நேரம் கிரீஸ் நிற்கிறாரோ, அந்த அளவிற்கு அவரது ஆட்டம் அதிரடியாக மாறும். உதாரணமாக அவர் 15 ஓவர்களை தாண்டி டி20 போட்டியில் நிற்கும்பொழுது, உலகில் எந்த அதிரடி பேட்ஸ்மேனையும் விட ஆபத்தானவராக இருக்கிறார். புள்ளி விபரங்கள் இதைத்தான் தெரிவிக்கிறது. அவர் கிரீசில் நிற்க நிற்க, அவருடைய ஸ்ட்ரைக்ரேட் எகிறி கொண்டு செல்லும்.

டி20 உலக கோப்பையில் விராட் கோலி பேட்டிங்கில் என்ன செய்ய வேண்டும் என்று பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா “விராட் கோலியிடம் அனைத்து வகையான கியர்களும் இருக்கிறது. அவர் பந்துக்குப் பந்து ரன் எடுப்பார்.

நீங்கள் காட்டுக்குள் செல்லும் பொழுதெல்லாம் சிங்கம் பற்றிய பயம் உங்களுக்கு இருக்கும். ஆனால் சிங்கம் உங்களை எல்லா நேரமும் கடிக்கப் போவது கிடையாது. ஆனால் சிங்கம் பற்றிய பயம் மாறாது. கிரிக்கெட்டில் விராட் கோலிதான் அந்தச் சிங்கம். அவர் கிரீஸில் இருக்கும் பொழுது எதிரணிகள் அச்சப்படும்.

டி20 உலகக் கோப்பை நடக்கும் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் 160 முதல் 180 ஆடுகளங்கள்தான் இருக்கும். அங்கு 200, 220 ரன் ஆடுகளங்கள் கிடையாது. எனவே விராட் கோலி ஆரம்பத்தில் நிலைத்து நின்று அதற்குப் பிறகு வேகப்படுத்த முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *