நாக்கில் எச்சில் ஊறும் புளி மிளகாய் ரெசிபி: ஒரு முறை இப்படி செய்யுங்க
செம்ம சுவையான புளி மிளகாய் ரெசிபி, இப்படி செய்யுங்க .
தேவையான பொருட்கள்
பஜ்ஜி மிளகாய் – 250 கிராம்
சிறிய எலுமிச்சை அளவு புளி
1 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி
1 ½ டீஸ்பூன் பெருங்காயம்
சாம்பார் பொடி அரை ஸ்பூன்
2 பச்சை மிளகாய்
வெல்லம் 1 டேபிள் ஸ்பூன்
ஒரு சின்ன துண்டு இஞ்சி நறுக்கியது
நல்லெண்ணை 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை: குக்கரில். நல்லெண்ணையை சேர்க்கவும், அதில் கடுகு சேர்க்கவும். தொடர்ந்து ஒரு வத்தல் சேர்க்கவும். தொடர்ந்து பச்சை மிளகாய், இஞ்சியை சேர்க்கவும். தொடர்ந்து நறுக்கிய பஜ்ஜி மிளகாய் சேர்த்து கிளரவும். சாம்பார் பொடியை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும். புளி தண்ணீரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெல்லத்தை சேர்க்கவும். உப்பு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து வெந்தயப் பொடியை சேர்க்கவும். தொடர்ந்து 2 விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளரவும்.