நெய் மணக்கும் அரவணை ரெசிபி: செம்ம சுவையான ஸ்வீட்
ஸ்ரீரங்கத்தில் கிடைக்கும் ஒரு வகை கோவில் பிரசாதம்தான் இந்த அரவணை. இந்த ஸ்வீட் ரெசிபி செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி
¾ கப் வெல்லம்
¾ கப் நெய்
½ டேபி ஸ்பூன் ஏலக்காய் பொடி
½ டேபிள் ஸ்பூன் சுக்கு பொடி
செய்முறை : ஒரு பாத்திரத்தில் பாதி அளவு நெய் சேர்த்து, அதில் பச்சரிசியை வறுக்க வேண்டும். வறுக்கும்போது அரிசி உள்வாங்கிக்கொண்ட நெய் வெளியே வரும். நன்றாக வறுத்ததும். அதை குக்கரில் சேர்த்து தண்ணீர் விட்டு, சிறிய துண்டு வெல்லம் 3 முதல் 4 விசில் வரை விடவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கிளரவும். ஒரு கம்பி பதத்திற்கு அடுத்த நிலையில் பாகை எடுக்கவும். தொடர்ந்து இதில் அவித்த அரிசியை சேர்த்து கிளரவும். தொடர்ந்து நெய்யை சேர்த்து கிளரவும். நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளரவும். தொடர்ந்து சுக்கை சேர்க்கவும். கிளர வேண்டும். தொடர்ந்து ஏலக்காய் சேர்த்து கிளரவும். செம்ம சுவையான அரவணை ஸ்வீட் ரெடி.