மதுரை பேமஸ் உருளைக்கிழங்கு பொட்டலம் ரெசிபி: சூப்பர் சைடிஷ்
இது மதுரையில் கிடைக்கும் பிரபலமான உணவு. ஒரு முறை இந்த உருளைக்கிழங்கு பொட்டலம் மாசால செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
கடலை எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
½ டேபிள் ஸ்பூன் கடுகு
½ டேபிள் ஸ்பூன் சீரகம்
½ டேபிள் ஸ்பூம் சோம்பு
2 வெங்காயம் நறுக்கியது
1 கொத்து கருவேப்பிலை
4 பூண்டு நறுக்கியது
4 பச்சை மிளகாய் நறுக்கியது
பெருங்காயம் கால் ஸ்பூன்
மஞ்சள்பொடி ½ டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன் அளவு
கொத்தமல்லி 1 டேபிள் ஸ்பூன்
புதினா 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர்
உப்பு
3 உருளைக்கிழங்கு அவித்தது
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து கிளரவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கிளரவும். நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளரவு. தொடர்ந்து பூண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் கடலை மாவை சேர்த்து கிளரவும். மிளகாய் பொடி சேர்க்கவும். மிளகாய் பொடி சேர்த்து அதிகம் கிளர வேண்டாம். கடைசியாக அவித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளரவும். நன்றாக கிளர வேண்டும். உப்பு சேர்த்து கிளரவும். சுவையான மதுரை உருளைக்கிழங்கு பொட்டலம் ரெடி. இதை நாம் மந்தார இலையில் வைத்து பொட்டலம் கட்டி சாப்பிடலாம்.