1 வாரம் கூட வைத்து சாப்பிடலாம்; செட்டிநாடு ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி
செட்டிநாடு ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடுகு- தாளிக்க
வெந்தயம்- தாளிக்க
பூண்டு- 10
புளி- சிறிதளவு
பச்சை மிளகாய்- 25 (விதை நீக்கியது)
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
சாம்பார் வெங்காயம்- 20
பெருங்காயம்- 1 டீஸ்பூன்
வெல்லம்- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் புளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இந்த கலவை ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு, சிறிது வெல்லம் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். இப்போது மீண்டும் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு கறிவேப்பிலை பூண்டு பற்கள் போட்டு தாளித்து இறக்கினால் சுவையான பச்சைமிளகாய் சட்னி தயார். இது ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.