“சச்சின் தோனி கோலி.. என்கிட்ட இருக்க இந்த குணம் இவங்களுக்கு கிடையாது” – கங்குலி கருத்து
எந்தவிதமான சுயநலமும் இல்லாமல் இளம் வீரர்களை ஆதரிப்பதன் மூலம், மேலும் அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பதன் மூலம், இந்திய கிரிக்கெட்டின் பாதையை திருப்பி விட்டார்.
இவருடைய காலத்தில் சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி என பெரிய நட்சத்திர எதிர்கால இந்திய கிரிக்கெட் பட்டாளமே உருவானது. இவர்களுக்கான வாய்ப்பையும் சுதந்தரத்தையும் கங்குலி முழுமையாக வழங்கினார்.
இவருக்குப் பிறகு மகேந்திர சிங் தோனியின் காலத்தில் இந்திய கிரிக்கெட் புதிய உயரத்தை தொட்ட பொழுது, அதற்கான அடிப்படையை உருவாக்கிய கேப்டனாக கங்குலி இருந்தார்.
மேலும் இவர் விளையாடிய காலத்தில் நவீன கிரிக்கெட் வடிவமாக அப்பொழுது இருந்த ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சச்சின் உடன் இணைந்து மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் தொடக்க ஜோடியாக உருவெடுத்தார்.
கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தியதில் சாம்பியன் டிராபியை வென்றது மற்றும் 2003ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றது இவருடைய சாதனைகளாக இருக்கிறது.
இந்த நிலையில் கங்குலி ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது சச்சின் விராட் கோலி தோனி ஆகியோரிடம் இருந்து ஒரு தரமான விஷயத்தை எடுத்துக் கொள்வதாக இருந்தால் அது என்னவாக இருக்கும் என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.