மகேஷ் பாபு சொன்ன சுவாரஸ்ய தகவல்… அது பீடி இல்ல…. ஆயுர்வேத பீடி…!
தெலுங்கு திரையுலகின் ரசிகர்களின் மன்னனாக இருப்பவர் மகேஷ் பாபு. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, கடைசியாக சர்க்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வௌியாகி ரசிகர்ளிடையே வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து மகேஷே் பாபுவின் அம்மா தவறினார். தொடர்ந்து மகேஷ் பாபு வீட்டில் அப்பா, அம்மா மற்றும அண்ணா இறந்ததால் பெரும் சோகத்தில் மூழ்கினார் மகேஷ் பாபு.
இதைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடித்துள்ள புதிய திரைப்படம் குண்டுர் காரம். இது மகேஷ் பாபுவின் 28-வது படமாகும். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகியுள்ளார். இந்த கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கிறது. இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது.
படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குண்டூர் காரம் படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி இல்லை என்றும், அது லவங்க இலைகளால் ஆன ஆயுர்வேத பீடி. முதல்முறை ஒரிஜினல் பீடி பயன்படுத்திய சில நேரத்திலேயே தலைவலி வந்துவிட்டது. பிறகுதான் ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். அது நன்றாக இருக்கவே படம் முழுவதும் பயன்படுத்தினோம் என தெரிவித்தார். நான் புகைப்பிடிக்க மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன் என தெரிவித்தார்.