இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் புதிய கட்டுப்பாடு..!

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வலைதளங்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. இந்த தளங்கள் பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் இவற்றினை பெரியவர், சிறியவர் மற்றும் படிக்காத மக்கள் கூட சுலபமாக உபயோகிக்கும் முறையில் இருப்பது தான்.

அதற்கு ஏற்றார் போல் இந்த மெட்டா நிறுவனமும் புதிய புதிய அப்டேட்களை அடிக்கடி அறிமுகப்படுத்தி கொண்டு தான் வருகிறது. இது பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் உள்ளதால் மக்களும் அதிக அளவில் இந்த வலைதளங்களை பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் புதிய கட்டுப்பாடு (Instagram and Facebook Restriction) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாடு என்னவென்றால், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வலைதளங்களை அதிக அளவில் இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்கு தற்கொலை உணர்வை தூண்டும் விதமாக உள்ள சென்சிடிக் கன்டென்டுகளை (Sensitive Content) மறைத்து வைக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *