வங்கதேச வீரர் நசிர் ஹூசைனுக்கு 2 ஆண்டுகள் தடை..!!
அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதில் 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது. ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சி (மேட்ச் பிக்சிங்), ரகசிய தகவல் பரிமாற்றம், சூதாட்டம் நோக்கில் சந்தேக நபர்கள் அணுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் நசிர் ஹூசைன் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் பங்கேற்க வங்கதேச வீரர் நசிர் ஹூசைனுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் நடந்த அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டியில் மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடந்தது அம்பலமானது. இதில் நசிர் ஹூசைனும் விலை உயர்ந்த பரிசுப்பொருள் வாங்கிய விவரத்தை மறைத்தது விசாரணையில் தெரியவந்ததால் 2 ஆண்டுகளுக்கு தடை விதித்ததுடன், 6 மாதங்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.