Pooja Kannan: சாய் பல்லவி வீட்டில் விசேஷம்.. தங்கை பூஜாவிற்கு விரைவில் டும்டும்டும்!
நடிகை சாய் பல்லவி பிரேமம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். மருத்துவரான இவர், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடையும் கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் படத்தின் டைட்டில் உள்ளிட்டவை குறித்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவியாக சாய் பல்லவி நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சாய் பல்லவி மட்டுமில்லாமல் அவரது தங்கை பூஜா கண்ணனும் சித்திரை செவ்வானம் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். இந்தப் படத்தில் நடித்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஒரே படத்துடன் அவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். சமூக சேவகரான பூஜா கண்ணன், தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். இந்நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். பிரேமம் என்ற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய சாய் பல்லவி, தொடர்ந்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராக உள்ளார். மருத்துவரான இவர், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அடுத்ததாக தமிழில் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையும் கட்டத்தில் உள்ளது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்களை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சாய் பல்லவி தங்கை பூஜா கண்ணன்: சாய் பல்லவி மட்டுமில்லாமல் அவரது சகோதரி பூஜா கண்ணனும் சித்திரை செவ்வானம் என்ற படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர். தொடர்ந்து தன்னுடைய அக்காவை போலவே நடிப்பை தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே படத்துடன் சினிமாவில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் பூஜா. சமூக சேவகராக செயல்பட்டுவரும் பூஜா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். இந்நிலையில் அவர் தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ளார். விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கிரைம் பார்ட்னர் டூ லைஃப் பார்ட்னர்: இதுநாள் வரையில் தன்னுடைய க்ரைம் பார்ட்னராக இருந்த வினீத் விரைவில் தன்னுடைய லைஃப் பார்ட்னராக மாறவுள்ளதாக பூஜா தெரிவித்துள்ளார். வினீத்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோவையும் பூஜா பகிர்ந்துள்ளார். இதில் இருவரின் அழகான தருணங்களையும் அவர் கொடுத்துள்ளார். மேலும் இந்த அழகானவர்தான் தனக்கு உண்மையான சுயநலம் இல்லாத அன்பையும் பொறுமையையும் எப்போதும் காதலிக்கவும் கற்றுக் கொடுத்தவர் என்றும் பூஜா கண்ணன் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். இதையொட்டி பூஜாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
சாய் பல்லவி திருமணம்?: முன்னதாக சாய் பல்லவியின் திருமணம் குறித்த பல செய்திகள் வெளியான நிலையில், அவற்றிற்கு அவர் மௌனத்தையே பரிசாக கொடுத்திருந்தார். இந்நிலையில் அவரது சகோதரியின் திருமணம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாய் பல்லவியின் திருமணம் குறித்து தெரிந்துக் கொள்ள அவரது ரசிகர்கள் ஆர்பம் காட்டி வருகின்றனர். தன்னுடைய முதல் படமான பிரேமம் மூலமாகவே ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறிய சாய் பல்லவி, விரைவில் சினிமாவில் இருந்து விலகி மருத்துவத்துறையில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.