வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! ஜன.31ம் தேதிக்குள் ‘இந்த’ வேலையை முடிங்க..!
2021 ஆம் ஆண்டு முதல் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது ஃபாஸ்டேக் முறைகளை செயல்படுத்தி வருகிறது. சுங்க கட்டண சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் காலத்தை குறைக்கும் நோக்கத்தில் ஃபாஸ்டேக் முறை செயல்படுத்தப்பட்டது. இந்த முறையின் மூலம் வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு பரிவர்த்தனை முறை எளிதாக்கப்பட்டது. இந்நிலையில் பல வாகனங்களுக்கு ஒரே ஃபாஸ்டேக்கை பயன்படுத்துவது அல்லது குறிப்பிட்ட வாகனத்துடன் பல ஃபாஸ்டேக்குகள் இணைப்பது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் ‘ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்டேக் ‘ என்ற திட்டம் செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ஃபாஸ்டேக் பயனர்கள் அனைவரும் தங்கள் கேஒய்சி இணைப்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஃபாஸ்டேக் உடன் கேஒய்சி இணைப்பு அப்டேட் செய்யப்படாத பட்சத்தில் ஜனவரி 31ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக்குகள் செயல் இழக்க செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கணக்குகள் அனைத்தும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் இதற்கான அசவுகரியங்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில் பயனர்கள் அனைவரும் தங்கள் ஃபாஸ்டேக்கின் கேஒய்சி செயல்முறைகளை முழுவதுமாக செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.