குட் நியூஸ்..! விரைவில் கோயம்பேடு மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் மருத்துவமனை..!
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொங்கல் சந்தை சில்லரை விற்பனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இந்த சந்தையில் இம்மாதம் 17-ம் தேதி வரையில் சுமார் 1000 வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு அதிக அளவு காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் மருத்துவமனை அமைக்க கருத்துரு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் அனுமதி பெற்று மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.