இன்ஹேலர்: பயன்படுத்துவது ஏன் அவசியம், தவிர்த்தால் என்ன ஆகும்?
‘வீசிங்’ எனப்படும் மூச்சுத் திணறல், நெஞ்சை இறுக்கிப் பிடிப்பது போன்ற உணர்வு, இருமல் போன்றவை ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னைகள்.
அதிலும் குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் ஆஸ்துமா நோயாளிகள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்கின்றனர்.
பொதுவாக, ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவர்களால் இன்ஹேலர் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனாலும் இன்ஹேலரைப் பயன்படுத்துவதில் மக்களில் பலர் தயக்கம் காட்டுகிறார்கள். இதைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது வழக்கமாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் இதற்கு ஒரு முக்கியக் காரணம்.
ஆனால், இன்ஹேலர் பயன்படுத்துவதில் எந்தத் தயக்கமும், பயமும் தேவை இல்லை என்கிறார் மதுரையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர். எம். பழனியப்பன். ஆஸ்துமா சிகிச்சையில் இன்ஹேலர் எவ்விதம் முக்கியப் பங்காற்றுகிறது என்பது குறித்து அவர் தரும் விளக்கம் இங்கே.