இதமா இருக்குனு அதிகம் யூஸ் பண்ணா குழந்தை பொறக்குறதுலேயே சிக்கலாகிடுமாம்.. எச்சரிக்கும் டாக்டர்கள்!
இன்றைய நவீன கால கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக ‘இருக்கையை சூடாக்கும்’ (Heating Seat) வசதி இருக்கின்றது. இந்த அம்சம் குளிர்காலத்தில் மிகுந்த உதவியாக இருக்கும். மிக முக்கியமாக டிரைவர்கள் தங்களை கதகதப்பாக வைத்துக் கொள்ள இந்த அம்சமே பெரும் உதவியாக இருக்கிறது.
வெளிப்புறம் அல்லது காரின் உட்புறம் எது குளிர்ச்சியாக இருந்தாலும் நம்மை இந்த அம்சம் சூடாகவும், உற்சாகமாய் வைத்துக் கொள்ளவும் உதவும். இத்தகைய அம்சமே பேராபத்து கொண்டது என சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அடுத்த சந்ததியை உருவாக்குவதிலேயே சிக்கலை ஏற்படுத்தும் அளவிற்கு மிக கொடியதே இந்த அம்சம் மருத்துவர் ஒருவர் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு இருக்கின்றார்.
ஆண்களுக்கே இத்தகைய சிக்கலை ஹீட்டிங் வசதிக் கொண்ட இருக்கை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது. ஆகையால், மருத்துவர்கள் சிலர் காரில் பயணிக்கும்போது தயவு செய்து இந்த அம்சத்தை தவிர்த்து விடுமாறு அறிவுறுத்தத் தொடங்கி இருக்கின்றனர். அதிக உடல் உஷ்ணம் ஆண்களுக்கு எதிரி என்பது நம்மில் பலர் அறிந்த ஒன்றே.
இதனால்தான் பெரும்பாலான மருத்துவர்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். முக்கியமாக சித்தா வைத்தியர்கள் சிலர் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர். ஆனால், நம்மில் பலர் தலைக்கே எண்ணெய்யை தேய்த்து குளிப்பதில்லை.
இதன் விளைவு உடல் சூடு ஏற்பட்டு எண்ணற்ற வியாதிகளுக்கு நாம் ஆளாகி வருகின்றோம். இத்தகைய சூழலிலேயே செயற்கையாக ஹீட்டாகும் வசதிக் கொண்ட இருக்கையில் அமர்ந்து நாம் ஹாயாக பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இது அந்த நேரத்தில் வேண்டுமானால் நமக்கு சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கலாம்.
ஆனால், இதையே தொடர்ச்சியாக நாம் பயன்படுத்தும்போது, நம்மையே அறியாமல் நாம் நம்முடைய விந்துவையும், அதன் உற்பத்தியையும் பாதிக்கச் செய்துவிடுகின்றோம். சில சோதனைகள் உடலின் மற்ற பாகங்களைவிட விந்து உற்பத்தி செய்யும் பகுதி இரண்டு டிகிரி வரை குறைவான குளிர்ச்சியாக இருத்தல் வேண்டும் என கூறுகின்றது.
இதையே சூடாகும் வசதிக் கொண்ட இருக்கை பாதிப்படைய செய்கின்றது. ஹீட்டிங் வசதிக் கொண்ட இருக்கை உங்களுக்கு அற்புதமான ரைடிங் அனுபவத்தை வழங்கலாம். ஆனால், மறு பக்கம் நம்மால் சாதாரணமாக உணராத முடியாத ஓர் பாதிப்பை அது நமக்கு ஏற்படுத்திவிடும். குழந்தை பாக்கியத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் விந்துக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேவேளையில், நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும் தகவலை தெரிவித்து இருக்கின்றனர். அதேவேளையில், நீங்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணினால், அது நிறைவேறும் வரை உங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.
அதில், முதல் விசயமாக ஹீட்டிங் இருக்கைப் போன்றவற்றை பயன்படுத்துபவராக இருந்தால், அதை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்ப்பதே நல்லது என்கிறார் சமீபத்தில் டெய்லி மெயில்-க்கு பேட்டியளித்த மருத்துவர் இப்போகிரதில் சர்ரிஸ். இதுமட்டும் இல்லைங்க, இருக்கமான கால் சட்டை (பேண்ட்) அணிவதையும் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதுமட்டுமில்லைங்க, நெடுநேரம் அமர்ந்தபடியும் இருக்க வேண்டும். அவ்வப்போது உடலைக் குளிர்விக்கும் விதமாக பயணத்தின் போது சிறிய சிறிய இடைவெளியைவிடவும் அறிவுறுத்தப்படுகின்றது. இதுமட்டுமின்றி, பயணங்களின் போது அடிக்கடி நீர், மோர் அல்லது இளநீர் போன்ற உடலைக் குளிர்விக்கும் பானங்களையும் அறுந்தலாம். குழைந்தைக்காக முயற்சிக்கும் ஆண்களாக இருந்தால் கட்டாயம் இதை கடைப்பிடிக்க தவறாதீர்கள்.