தேசிய நெடுஞ்சாலையில் டூவீலர், 3 வீலருக்கு தடை! மத்திய அரசு அதிரடி உத்தரவு!
தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போது டூவீலர்கள்,3 வீலர்கள் மோட்டார் அல்லாத வாகனங்கள் உள்ளிட்ட சில வாகனங்கள் பயன்படுத்த தடை விதித்து தேசிய நெடுஞ்சாலை துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது தற்போது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடை எதற்காக விதிக்கப்பட்டுள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் தான் முதுகெலும்பு என்று சொல்லிவிடலாம். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய பணியை செய்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை என்றால் இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் மிக அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் லட்சக்கணக்கான வாகனங்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றன. இந்த வாகனங்கள் பயணம் செய்ய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் சுங்க கட்டணம் செலுத்திய வாகனங்கள் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய வேண்டும். இதற்காக ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கட்டணம் சாலை பராமரிப்பிற்காகவும் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாலைகள் எவ்வளவு தூரம் சேதம் ஆகிறது என்பதை வைத்து ஒவ்வொரு வாகன வரைக்கும் ஏற்ப சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதில் டூவீலர்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பு செய்யப்படுவதில்லை. இந்தியா முழுவதும் டூவீலர்கள் இலவசமாகவே தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தலாம்.
ஆனால் இதில் ஒரு சிக்கல்கள் தற்போது ஏற்பட்டுள்ளது. டெல்லியை சுற்றியுள்ள மூன்று தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போது டூவீலர்கள்,3 வீலர்கள் உள்ளிட்ட சில வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய நெடுஞ்சாலை எண் 48, தேசிய நெடுஞ்சாலை எண்344 எம், தேசிய நெடுஞ்சாலை எண் 248 பிபி நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டு சக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்கள் மோட்டார் அல்லாத வாகனங்கள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் மல்டி ஆக்ஸில் ஹைட்ராலிக் டிரெய்லர்கள் மற்றும் குவார்டிசைக்கிள் ஆகிய வாகனங்கள் இந்த நெடுஞ்சாலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இல்லாமல் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேசிய நெடுஞ்சாலை 48 கிலோமீட்டர் 14 + 300 முதல் கிலோமீட்டர் 42 + 000 வரையிலும் தேசிய நெடுஞ்சாலை எண் 344 எம் பேங்ஹோலி கிராமம் முதல் நஜாபரா வரையிலும் தேசிய நெடுஞ்சாலை என் 248 பிபி யில் சிவமூர்த்தி முதல் தேர்ச்சி டௌலா வரையிலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பின்னால் முக்கியமான காரணம் இருக்கிறது. அதாவது இந்த தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் அதிவேக தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் அதிக வேகத்தில் வாகனங்கள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த இடத்தில் மற்ற மெதுவாக செல்லும் வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது இதன் காரணமாக மெதுவாக செ.ல்லும் வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவாக செல்லும் வாகனங்கள் இந்த நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் அதிகமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மற்றபடி மற்ற அனைத்து சாலைகளிலும் டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி உள்ளது.