இரண்டில் எது பெஸ்ட்!! ஹூண்டாயின் கை வண்ணம் தூள் கிளப்புது – ரூ.10,000 மட்டுமே இரண்டிற்கும் வித்தியாசம்!

2020ஆம் ஆண்டில் கடைசியாக பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டா காரின் விற்பனை சற்று குறைய துவங்கிய உடனேயே ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரை ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் செய்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 16ஆம் தேதி ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய க்ரெட்டா காரின் ரூ.10.99 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது பழைய க்ரெட்டாவின் விலையை விட வெறும் ரூ.10,000 என்ற அளவில் மட்டுமே அதிகமாகும். காரின் விலை இவ்வளவு குறைவாக மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதால், க்ரெட்டாவில் என்னென்ன அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன? என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். புதிய க்ரெட்டாவுக்கும், பழைய க்ரெட்டாவுக்கும் இடையேயான வித்தியாசங்களை இனி பார்க்கலாம்.

தோற்றம்: க்ரெட்டா காரின் அளவுகளில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், டிசைனில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, காரின் முன்பக்கம் ஆனது பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது. ஏனெனில், இது காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் ஆகும். முன்பக்கத்தை போல், காரின் பின்பக்கத்திலும் கவனித்தக்க வகையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆனால், காரின் சைடில் அலாய் சக்கரங்களை தவிர்த்து, பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. முன்பை விட கார் கொஞ்சம் சதுரமாகி உள்ளது. அதாவது, காரின் முன்பக்கமும், பின்பக்க வளைவுகள் கொஞ்சம் ஷார்ப் ஆக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கா கொரியன்-ஸ்டைல் கார் எவ்வாறு தனது முன்பக்கத்தை கொண்டிருக்குமோ அவ்வாறு புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் முகப்பு பகுதி உள்ளது.

உட்பக்கம்: உள்ளே, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என இரு திரைகள் டேஸ்போர்டில் 2024 க்ரெட்டா பெற்றுள்ளது. இதன் காரணமாகவே, கொஞ்சம் அட்வான்ஸான தோற்றத்தில் 2024 க்ரெட்டா காரின் உட்புறம் காட்சியளிக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் காருக்கு உள்ளே நிறைய இடங்களில் வண்ண விளக்குகளை ஹூண்டாய் பொருத்தியுள்ளது.

வசதிகள்: 2024 க்ரெட்டா காரின் வசதிகளின் விபரங்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், நமக்கு படங்களின்படி பார்க்கும்போது, டிரைவருக்கான விபரங்களை வழங்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை 10.25-இன்ச்சில் ஃபுல்-டிஜிட்டல் தரத்தில் வழங்கப்பட உள்ளது. பழைய க்ரெட்டாவில் நிறைய வேரியண்ட்களில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. ஆனால் புதிய மாடலில் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் கிடைக்கும்.

என்ஜின்: 2024 க்ரெட்டா காரில் என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. பழைய க்ரெட்டாவில் வழங்கப்பட்ட 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை புதிய க்ரெட்டாவிலும் பெறலாம். ஆனால் புதிய அம்சமாக, டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் க்ரெட்டா காரை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம்.

விலை: பழைய க்ரெட்டா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.87 லட்சத்தில் இருந்து ரூ.19.20 லட்சம் வரையில் இருந்தன. புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் முழு எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் க்ரெட்டா காரின் விலைகள் மட்டுமே தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. காரின் அறிமுக ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10,99,900 ஆகும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *