நாளை எடப்பாடி பழனிச்சாமி கூட பிரதமர் ஆகலாம்.. அவரை ஆளுமை மிக்க தலைவராகத்தான் பார்க்கிறோம்.. தம்பிதுரை சரவெடி!
கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அதிமுக எம்.பி.தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழ் உள்ளிட்ட மொழிகளை எட்டாவது அட்டவணையில் ஆட்சி மொழியாக்காமல் ஹிந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைத்துக்கொண்டு இருந்தால் இது கண்துடைப்பு வழியாக தான் இருக்கும். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் பொழுது 8வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். பிரதமரும் அந்தந்த மொழிகளில் பேசுகிறார். ஆனால் அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும். ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு மற்ற மொழிகளை மாற்றான் தாய் போல் பாவிப்பது உதட்டளவில் பேசுவதாக தான் கருதப்படும்.
எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய அரசு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளிக்க வேண்டும். தாய் மொழியையும் கலாச்சாரத்தையும் உண்மையாக காக்கிறோம் என யார் கூறுகிறார்களோ அவர்களுக்கு தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு தமிழர்கள் அனைவரும் இந்த தை திங்களில் உறுதி ஏற்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மொழிகளில் பாடத்தை தருகிறோம் என கூறுகிறார்கள். அதை வரவேற்கிறோம். ஆனால், அதற்குரிய வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும் இந்திக்கு ஆட்சி மொழி கொடுத்து ஒரு தகுதியை வழங்கி உள்ளது போல் தமிழ் போன்ற தகுதி உள்ள மத்த மொழிகளுக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுத்தால் தான் தங்களது தாய் மொழியில் படிக்க முன் வருவார்கள். வட இந்தியாவில் அதிக அளவில் ஆங்கிலம் படிக்கிறார்கள் அவர்களுக்கு இந்தி என்பது சாதாரண விஷயம் அதேசமயம் இங்கு ஆங்கிலம் படிக்க வேண்டாம் என கூறுகிறார்கள். அதற்கு முதலில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் இதை விடுத்து காலணி ஆதிக்கம் கலாச்சாரம் மாறுபாடு என பேசுவது ஒரு நாடகமாக கருதுகிறேன். 2014 தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றோம். ஆகவே கூட்டணியில் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று இல்லை.
2014 தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றோம். ஆகவே கூட்டணியில் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று இல்லை. 2016க்கு பிறகு தான் நரேந்திர மோடி ஆளுமை மிக்க தலைவர் ஆனார். அதற்கு முன் அவரை குஜராத் முதல்வராக தான் தெரியும் நாளை எடப்பாடி பழனிச்சாமி கூட பிரதமர் ஆகலாம். எங்களைப் பொருத்தவரை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை ஆளுமை மிக்க தலைவராக தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தம்பிதுரை கூறியுள்ளார்.