யூரிக் அமில சுரப்புக்கும் பால் குடிப்பதற்கும் உள்ள கனெக்ஷன்! இது தெரிஞ்சா பிரச்சனை ஓவர்!
குறிப்பாக யூரிக் ஆசிட் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பால் சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி பொதுவானதாக இருக்கிறது.
நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது மற்றும் அனைத்து வகையான நோய்களைப் பற்றியும் ஆயிரக்கணக்கான தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
உடலில் யூரிக் அமிலம் ஏன் அதிகரிக்கிறது?
ஒருவரின் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து வருகிறது என்றால், அவரது உடலில் பியூரினின் அளவு கூடுகிறது என்றுதான் பொருள். உண்மையில், யூரிக் அமிலம் என்பத், செரிமானத்தின் போது பியூரின்கள் உடைக்கப்படும்போது உருவாகும் ஒரு அமிலமாகும். இந்த அமிலம் உடலின் கழிவுப் பொருளாகும்.
அதிக பியூரின் கொண்ட
உட்கொள்ளும்போது, அது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் மூட்டு வலி, நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
எனவே, யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சீஸ், முட்டை, மீன், சிவப்பு இறைச்சி அல்லது வெள்ளை இறைச்சி போன்ற அதிக புரத உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், இந்த உணவுகளில் அதிக அளவு பியூரின்கள் உள்ளன.
போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவில் பால் குடிக்கலாம். ஏனென்றால், ப்யூரின் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதால் புரத உணவுகளை தவிர்த்தாலும், உடலுக்கு ஓரளவாவது புரதம் வேண்டும் எனவே உடலுக்குத் தேவையான புரதங்கள் உள்ள பாலை குடிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
யூரிக் ஆசிட் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியலில், சீஸ், முட்டை, மீன், சிவப்பு இறைச்சி அல்லது வெள்ளை இறைச்சி ஆகியவை முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இவற்றைத் தவிர, கீரை, பட்டாணி, ப்ரோக்கோலி, காளான்கள் போன்ற சைவ உணவுகளிலும் ப்யூரின் அதிக அளவில் உள்ளது. எனவே, இதுபோன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.