நான் அந்த ராமசாமி இல்ல! சர்ச்சையில் சிக்கிய சந்தானம்!
நடிகர் சந்தானம் தற்போது பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். சந்தானம் நடிப்பில் உருவான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
அந்த டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்த ட்ரைலரில் ‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ’ என்ற வசனமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த சமயத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இடம்பெற்று இருக்கும் “சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ ” என்ற வசனம் கொண்ட ஆடியோவை வைத்து நா அந்த ராமாமி இல்ல டப்ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியீட்டு இருந்தார்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலே சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வீடியோவை பார்த்த பலரும் பெரியாரை விமர்சித்து இந்த வீடியோவை சந்தானம் வெளியீட்டு இருக்கிறார் என கூறி வருகிறார்கள். இப்படியான சர்ச்சை வெடித்த பிறகு சந்தானம் வேகமாக வீடியோவையும் நீக்கிவிட்டார்.
இருப்பினும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இன்னுமே வைரலாகி வருகிறது. தந்தை பெரியார் ஈ. வெ. இராமசாமி ‘கடவுளை வணங்குகிறவர்கள் காட்டுமிராண்டி’ என்று கூறியிருக்கிறார். அதனை வைத்து தான் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் “சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ ” என்ற வசனம் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.