அனுபவத்திற்கு ஆப்பு வச்ச ஜிம்பாப்வே – கடைசில பவுலிங் போட்டு வாங்கி கட்டிக் கொண்ட மேத்யூஸ்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அணியானது 3 ஒருநாள் போட்டிகள் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்தது. இதில் முதல் போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசியாக நடந்த 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்தது. இதில், ஹசரங்காவின் அற்புதமான பந்து வீச்சு மற்றும் குசால் மெண்டிஸின் சிறப்பான பேட்டிங் காரணமாக இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. இதில் முதல் போட்டியில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே பவுலிங் செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் டாப் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு அசலங்கா மற்றும் ஷனாகா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதன் மூலமாக இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் கிரைக் எர்வின் 54 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் சிக்கந்தர் ராசா 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. இதில், 19ஆவது ஓவரில் 1, 1, 6, 1, 0, 1 என்று மொத்தமாக 10 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது
அந்த ஓவரை ஏஞ்சலோ மேத்யூஸ் வீசினார். இதில், நோபாலாக வீசப்பட்ட பந்தில் ஜாங்வே சிக்ஸர் விளாசினர். பின்னர் மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. அடுத்த பந்திலேயும் சிக்ஸர் அடிக்கப்பட்டது, கடைசி 4 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. இதில், 3ஆவது பந்தை வீணடித்த நிலையில், 4ஆவது பந்தில் ஜாங்கே 1 ரன் எடுத்தார்.
கடைசியாக 5ஆவது பந்தில் கிளைவ் மதாண்டே சிக்ஸர் அடிக்கவே ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை 18 ஆம் தேதி நடக்கிறது.