MGR Birthday – எம்ஜிஆர் பிறந்தநாள்.. அவருக்கு போஸ்டர் அடிக்க சொன்னா யாருக்கு அடிச்சிருக்காங்க பாருங்க

சென்னை: புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர். நடிகராக மட்டுமின்றி அதிமுக கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.

இன்று அவரது 107ஆவது பிறந்தநாள். இந்த சூழலில் திருப்பத்தூரில் அவருக்கு போஸ்டர் அடிப்பதற்கு பதிலாக இன்னொருவருக்கு அடித்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ்நாட்டில் யாராலும் மறக்கமுடியாத பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். எம்ஜிஆர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். இலங்கையின் கண்டியில் பிறந்த அவர் அடிப்படையில் கேரளத்துக்காரர். சில காரணங்களால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த எம்ஜிஆருக்கு கலை மீது ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி பாய்ஸ் கம்பெனி என்ற நாடக குழுவில் இணைந்தார். ஆரம்பத்தில் அவர் பெண் வேடம் ஏற்று நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, காலம் செல்ல செல்ல முக்கியமான ரோல்கள் கிடைத்தன.

சினிமா எண்ட்ரி: நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி 1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து தொடர்ந்து சினிமா சான்ஸ்கள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி, இரு சகோதரர்கள், வீர ஜெகதீஸ், மாயா மச்சிந்திரா உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்துக்கொண்டே இருந்தார். இருந்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் பெரிதாக கிடைக்கவில்லை.

திராவிட இயக்கங்களுடன் பழக்கம்: சூழல் இப்படி இருக்க திராவிட இயக்க தலைவர்களுடன் எம்ஜிஆருக்கு பழக்கம் ஏற்பட்டு அது நட்பாக மாறியது. குறிப்பாக கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது எம்ஜிஆருக்கு. இதற்கிடையே எம்ஜிஆரும் ஃபேமஸான நடிகராக மாறிவிட்டார். மந்திரிகுமாரி, ராஜகுமாரி, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம், ராஜராஜன், மன்னாதிமன்னன் என பல படஙக்ள் ஹிட்டடித்தன. தமிழ்நாடு முழுவதுமே எம்ஜிஆரின் செல்வாக்கு அதிகரித்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *