‘விடாமுயற்சி’ 4 மொழிகளின் ஓடிடி உரிமையை பெற்ற நிறுவனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது ‘விடாமுயற்சி’ படத்தின் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
மற்ற மொழிகளின் ஓடிடி ரிலீஸ் உரிமை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பிசினஸ் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.