தங்கம் விலை தடாலடி சரிவு.. செம சான்ஸ் வந்திருக்கு மக்களே..!!
சாமானிய மக்கள் முதல் வல்லரசு நாடுகளின் அரசு வரையில் தங்கத்தை வாங்குவதை ஒரு முக்கிய நடைமுறையாகப் பாலோ செய்து வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தங்கம் விலை குறைவாக இருக்கும் போது அதிகளவில் வாங்கிக் குவித்து விட்டு, விலை உயரும் போது விற்பனை செய்யும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது.
இதற்கு முக்கியமான காரணம், தங்கத்தை நிலையான சொத்தாக அரசுகள் நம்புகிறது, பல துறையில் முதலீடு செய்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தங்கத்தில் முதலீடு செய்வது அமெரிக்கா முதல் இந்தியா வரையில் வழக்கமாகக் கொண்டு உள்ளது. தங்கத்தின் இருப்பு வலிமையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க உதவும். அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன.
ஈரான் நாட்டின் சிறப்பு ராணுவ குழு மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பின் இலக்குகளை ஏவுகணைகளால் தாக்கிய ஈரான் தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் பிரச்சனை காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் புதிய பிரச்சனை வெடிக்கத் துவங்கியுள்ளது.இதனால் கடந்த சில மாதங்களில் இல்லாத வகையில் டாலரின் தேவை அதிகரித்துள்ளதால், தங்கம் மீதான முதலீடுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாகச் சர்வதேசச் சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2048 டாலர் அளவில் இருந்த வேளையில் இன்று 2023 டாலர் வரையில் குறைந்துள்ளது.கிட்டதட்ட ஓரே நாளில் 25 டாலர் வரையில் குறைந்துள்ளது, இதுபோன்ற மெகா சரிவு இதுவரையில் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் டாலர் மதிப்பு நீண்ட காலத்திற்குப் பின்பு 103.40 ஆக உயர்ந்துள்ளது.இது அனைத்தும் ஈரான் நாட்டின் IRGC என அழைக்கப்படும் இஸ்லாமிய புரட்சிகரக் காவலர் படை, ஈராக் நாட்டின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் உள்ள இலக்குகளை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது மூலம் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் பிரச்சனைகளைச் சீராகும் வரையில் தங்கம் விலை தொடர்ந்து தங்கம் விலை சரிவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.