ராயல் என்ஃபீல்டு, கேடிஎம் எல்லாம் ஒரமா போ! இந்த 2 புதிய பைக்குகள் மீது தான் மக்கள் பார்வை!
ஹஸ்க்வர்னா நிறுவனம் தனது ஸ்வார்ட்பில்லியன் 401 மற்றும் விட்பில்லியன் 250 ஆகிய இரண்டு பைக்குகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த பைக் முறையே ரூபாய் 2.19 லட்சம் மற்றும் 2.92 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஹஸ்க்வர்னா இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் ஸ்வார்ட்பில்லியன் 401 மற்றும் விட்பில்லியன் 250 ஆகிய பைக்குகளை அப்டேட் செய்த அறிமுகப்படுத்தியுள்ளன. ஏற்கனவே இந்த பைக்குகள் சர்வதேச அளவில் விற்பனையாகி வந்த பைக்குகள் தான் முதன்முறையாக இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 250 ஹஸ்தீஸ் என்ற பைக் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது புதிதாக இரண்டு வழக்குகளை களம் இறக்கி உள்ளது.
இந்நிறுவனம் கேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமாகவும் ஹஸ்க்வர்னா நிறுவனமும் தங்கள் தொழில்நுட்பங்களை பகிர்ந்து வரும் நிலையில், ஸ்வார்ட்பில்லியன் 401 என்ற பைக் கேடிஎம் 390 பைக்கின் அடிப்படையில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 250 டியூக் பைக்கை அடிப்படையாகக் கொண்டு விட்பில்லியன் 250 என்ற பைக்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பைக்கிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருவது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஸ்வார்ட்பில்லியன் 401 பைக் தனது கேடிஎம் 390 டியூக் பைக்கிலிருந்து பல்வேறு மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த பைக் ஒரு ரக்கடான லுக்கை பெற்றுள்ளது. முக்கியமாக இதன் செய்து பலன்கள் டிசைன் மாற்றப்பட்டுள்ளன.
கேடிஎம் பைக்கில் கீழ்ப்பக்கமாக வைக்கப்பட்டுள்ள எக்ஸாஸ்ட் இந்த பைக்கில் வழக்கமாக பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ளது. பின்பக்க டயர் பெரிய அளவில் வழங்கப்பட்டுள்ளன. எந்த பைக் லுக் அடிப்படையில் கேடிஎம் பைக்கில் இருந்து பல்வேறு மாறுதல் பெற்று தனித்துவமான லூக்கை பெற்றுள்ள பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேடிஎம் டிசைனை விரும்பாத மக்கள் இந்த பைக்கை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
கேடிஎம் 390 டியூக் பைக்கில் இருந்து பில்லியன் 401 பைக் அதே பிரேமையும் பின்பக்க சப்ஸ்க்ரைமையும் பெற்றுள்ளது. இதன் நெஞ்சினை பொருத்தவரை 398.6 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 46 பிஎச்பி பவரையும் 7000 ஆர்பிஎம்-ல் 39 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் பை டைரக்ஷனனில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த பைக்கில்அம்சங்களை பொருத்தவரை ரெய்டு பை ஒயர் டெக்னாலஜி, சூப்பர் மோட்டோ ஏபிஎஸ், ட்ராக்சன் கண்ட்ரோல், ஐந்து இன்ச் டிஎப்டி ஸ்க்ரீன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டைப் சி சார்ஜிங், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை முன்பக்கம் யூஎஸ்டி ஃபோர்க், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது டபிள்யூபி நிறுவனத்தின் சஸ்பென்ஷன் செட்டப் ஆகும்.
பிரேக்கிங் பொருத்தவரை முன்பக்கம் 320 மிமீ பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கு வழங்கப்பட்டுள்ளன. இது டூயட் சேனல் ஏபிஎஸ், தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பில்லியன் 401 பைக்கை பொறுத்தவரை 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது 171.2 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.
ஹஸ்க்வர்னா விட்பில்லியன் 250 பைக்கை பொருத்தவரை கேடிஎம்250 டியூக் பைக்கின் அடிப்படையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பிளாட் பேனல் டேங்க் கவர் வழங்கப்பட்டுள்ளன. வட்டமான எல்இடி ஹெட்லைட் டிஆர்எல்லுடன் கிரே பெயிண்ட் ஸ்கீமில் வழங்கப்பட்டுள்ளது. பார்க்கவே சற்று வித்தியாசமாக லுக்கில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
சைடு மற்றும் டெயில் பேனல்கள் சிங்கிள் யூனிட்டாக வழங்கப்பட்டுள்ளன. பழைய மாடலில் ஸ்பிளிட் யூனிட் இருந்தது இதுபோக இந்த பைக்கில் சிங்கிள் பீஸ் சீட், காப்பர் பிரான்ஸ் பினிஷிங் கொண்ட இன்ஜின் கேஸ், அண்ட் ஸ்ட்ரிப் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. இதனால் சாலையில் செல்லும்போது வித்தியாசமாக தெரியும் வகையில் உள்ளது.
இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 177மீமியாக உள்ளன. சீட்டு உயரம் 820மீமியாக இருக்கிறது பின்பக்கசீட்டு உயரம் 877மிமீயாக உள்ளன. சிங்கிள்பீஸ் சீட் என்பதால் ஒரு சீட் 100மிமீ நீளம் இருக்கிறது. மேலும் இந்த பைக்கில் 13.5லிட்டர் ஃப்யூயல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. பழைய மாடலில் 9.5லிட்டர் டேங்க் தான் இருந்தது. இந்த பைக் ஒட்டுமொத்தமாக 163.8கிலோ எடை கொண்டதாக உள்ளன.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 249 சிசி லிக்யூட்கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 9500 ஆர்பிஎம்-யில் 30.57 பிஎச்பி பவரையும் 7500 ஆர்பிஎம்-ல் 25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சிக்ஸ் ஸ்பிடு கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் 43 வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் ஆப்செட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் 320 மிமீ பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ள. இது டூயட் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் உள்ள முக்கிய அம்சமாக 5 இன்ச் டிஎஃப்டி ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளன. இதில் ரைடு பை ஒயர் ஸ்சுட்ச்சபில் ஏபிஎஸ் குயிக்ஷிப்ட் டைப் சார்ஜிங் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த ஸ்வாட்டுபில்லியன் 401 மற்றும் வித் பில்லியன் 250 ஆகிய இரண்டு பைக்குகளும் இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் நான் இருக்கும் அதிகமான கேடிஎம் ஹஸ்குவர்னா டீலர்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டு பைக்கும் 2+3 வருட வாரண்டியுடன் வருகிறது. இதற்கு 7500 கிலோ மீட்டர் இடைவெளியில் சர்வீஸ் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது.
ஸ்வார்ட்பில்லியன் 401 பைக்கை பொறுத்தவரை மார்க்கெட்டில் உள்ள ராயல் என்ஃபீல்டு 411 மற்றும் யெஸ்டி ஸ்கிரம்லர் செக்மெண்டில் உள்ள பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்குகிறது. அதேநேரம் விட்பில்லியன் 250 பைக் கேடிஎம்250 டியூக் மற்றும் சுஸூகி ஜிக்ஸர்250 ஆகிய பைக் போட்டியாக களமிறங்குகிறது. இதன் விலையைப் பொறுத்தவரை ஸ்வார்ட்பில்லியன்401 பைக் ரூபாய்2.92 லட்சம் என்ற விலையிலும் விட்பில்லியன் 250 பைக் ரூபாய்2.19 லட்சம் என்ற பெயரிலும் விற்பனைக்கு வருகிறது.